பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

பிகாஸ் BGauss நிறுவனம், ஆர்யுவி 350 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது ஏறக்குறைய இந்த நிறுவனத்தின் டி15 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றத்திலேயே அமைந்துள்ளது. ஆர்யுவி 350-ல் ஆர்யுவி 350 ஐ, 350 இஎக்ஸ் மற்றும் 350 மேக்ஸ் என மூன்று வேரியண்ட்கள் உள்ளன. இவற்றில் 16 அங்குல அலாய் வீல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டரில் 3 கிலோவாட் அவர் லித்தியம் அயன் எல்எஃப்பி பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். இதில் உள்ள 3.5 கிலோவாட் அவர் மோட்டார் அதிகபட்சமாக 165 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ வேகம் வரை செல்லும். வேரியண்ட்களுக்கு ஏற்ப பேட்டரி திறன் மாறுபடும். முழுமையாக சார்ஜ் செய்தால் 350 இஎக்ஸ்ஐ, 350இஎக்ஸ் 90 கி.மீ தூரம் வரை செல்லும். 500 வாட்ஸ் சார்ஜர் மூலம் 5 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். இதுதவிர, 5 அங்குல டிஎப்டி ஸ்கிளீன், நேவிகேஷன் வசதி, போன் அழைப்புகளை பார்க்கும் வசதி, குரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் மோட், ஹில் ஹோல்ட் உள்ளிட் அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலையாக துவக்க மாடல் ரூ.1.1 லட்சம், இஎக்ஸ் ரூ.1.25 லட்சம், எம்எக்ஸ் வேரியண்ட் ரூ.1.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்