உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் நேரில் மனு அளிக்கலாம்: செங்கல்பட்டு கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இம்மாதம் 19ம் தேதி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘’உங்களை தேடி உங்கள் ஊரில்‘’ என்ற புதிய திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்தும் நோக்கில் வரும் 19ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களால், செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்யப்படும். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மேற்படி தினத்தன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை “காட்டாங்கொளத்தூர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்” பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து தங்களது மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை