பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை அறிக்கை


சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 2014ல் பதவி விலகுகிற போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ₹72 ஆகவும், டீசல் விலை ₹50 ஆகவும் விற்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு 70 டாலராக சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிறபோது பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும்.

ஆனால், இன்று பெட்ரோல் விலை ₹100.85 ஆகவும், டீசல் விலை ₹92.34 ஆகவும் உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வோடு பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

சென்னை பூவிருந்தவல்லி அருகே ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி

பொன்னேரி அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து

சென்னிமலை அருகே திருமண விழாவில் பங்கேற்றவர்களை மலைத்தேனீகள் கொட்டியதில் 31 பேர் காயம்