கர்நாடகாவில் பெட்ரோல் ரூ3, டீசல் ரூ3.50 உயர்வு


பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரியை 40 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ3 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ3.50 உயர்ந்துள்ளது. பெங்களூருவில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ99.84 மற்றும் டீசல் லிட்டருக்கு விலை ரூ85.93க்கு விற்பனை செய்யப்பட்டது.

செஸ் வரி உயர்வால் பெட்ரோல் லிட்டர் விலை ரூ102.84 ஆகவும், டீசல் லிட்டர் விலை ₹89.43 ஆகவும் அதிகரித்துள்ளது.இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ2500 கோடி முதல் ரூ3000 கோடி வரை வருவாய் அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!