பெட்ரோல் வாகனங்களை விட எலக்ட்ரிக் டூவீலர்கள் விலை 70 சதவீதம் உயரும் அபாயம்

ஒன்றிய அரசு பேம் 2 மானிய திட்டத்தை நிறுத்தியதால் பாதிப்பு

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக எலக்ட்ரிக் வாகனங்கள் கருதப்படுகின்றன. பெட்ரோல் விலை உச்சத்தால் பலர் எலக்ட்ரிக் டூவீலர்கள் வாங்க ஆர்வம் காட்டினர். இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பேம் – மானிய திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த மானிய திட்டம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், நீட்டிக்க அரசு மறுத்து விட்டது. இதனால் மானிய திட்டம் முடிவுக்கு வந்து விட்டது.

ஒன்றிய அரசின் இந்த முடிவால் எலக்ட்ரிக் டூவீலர்கள் விலை, பெட்ரோல் டூவீலர்களின் விலையை விட 70 சதவீதம் வரை உயரும் அபாயம் உள்ளதாக இக்ரா நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.  மேலும், பேம் 2 திட்ட மானிய விலையுடன் ஒப்பிடுகையில், டூவீலர் வாங்குவதற்கான முன்பணம் 10 சதவீதம் கூடுதலாக செலுத்தவேண்டியிருக்கும். இது மின் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும். 2025ம் ஆண்டில் எலக்ட்ரிக் டூவீலர்கள் விற்பனை, மொத்த டூவீலர்கள் விற்பனையில் 8 சதவீதமாக இருக்கும் என இக்ரான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேம் -2 திட்டத்துக்குப் பதிலாக மின் வாகன ஊக்குவிப்பு திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வருகிறது.

இந்த திட்டத்தில் எலக்ட்ரிக் டூவீலர்களுக்காக மொத்தம் ரூ.333.39 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் 3,33,387 எலக்ட்ரிக் டூவீலர்களுக்கு அதிகபட்சம் ரூ.10,000 சலுகை கிடைக்கலாம். இருப்பினும், பேம் – 2 திட்டத்துடன் ஒப்பிடுகையில் புதிய திட்டத்தில் எலக்ட்ரிக் டூவீலர்களுக்கான மானியம் குறைவு என்பதால், நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது மறுப்பதற்கில்லை. பேம் -2 மானிய திட்டம் ரத்து குறித்து பேசிய இக்ரா நிறுவன முதன்மை துணை தலைவர் ஷம்ஷர் திவான் , எலக்ட்ரிக் டூவீலர்களின் விலையில் 40 சதவீதம் உள்ளதால், பேட்டரிகளின் விலை குறைந்தால் தான் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மானிய ரத்தால் ஏற்பட்டுள்ள சுமை குறையும், என்றார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்