பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் இன்ஜினியர்

மங்களூர் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant Engineer/Assistant Executive

i) பிரிவு: Chemical. மொத்த இடங்கள்: 15 (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-2).
ii) பிரிவு: Mechanical: 8 இடங்கள் (ஒபிசி-4, எஸ்சி-3, எஸ்டி-1).
iii) பிரிவு: Electrical: 3 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1)
iv) பிரிவு: Computer Science: 1 இடம் (எஸ்சி)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 27க்குள்.
சம்பளம்: ரூ.50,000-1,60,000.
தகுதி: Chemical Engineering/Chemical Technology/Petro Chemical Technology/Mechanical Engineering/Electrical Engineering/Electrical & Electronics Engineering/Computer Science Engineering/ Computer Technology/Information Science/Artificial Intelligence & Machine Learning/Data Science/Cyber Security ஆகிய பாடங்களில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கேட்-2023 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.118/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
https://www.mrpl.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2024.

Related posts

ஒரு தமிழன் பிரதமராக பதவியேற்பதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும் : கமல்ஹாசன்

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு