18 ஆண்டுகளாக வசிக்கும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்: கலெக்டரிடம், திருநங்கைகள் மனு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 18 ஆண்டுகளாக வசிக்கும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், திருநங்கைகள் புகார் மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், திருநங்கைககள் குழுவின் தலைவர் தனம் தலைமையிலான குழுவினர் புகார் மனு அளித்துள்ளனர். அதில், காஞ்சிபுரம் அருகே குருவிமலை, திருநங்கைகள் நகரில் 35க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள், வசிக்கும் இடத்தில் அரசின் சார்பில் குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி ஆகியவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள், அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் வசித்து வருகிறோம். ஆனால், நாங்கள் வசிக்கும் இடத்திற்கு வீட்டு மனைப்பட்டா இல்லை, தொடர்ந்து 18 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசித்து வரும் எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். முக்கியமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்குள் யாரும் எங்களுக்கு குடியிருக்க வீடு தர மறுக்கிறார்கள். அப்படியே வீடு வாடகைக்கு கொடுத்தாலும் அதிகமான வாடகை கேட்பதுடன் அடிக்கடி வாடகையை உயர்த்தி விடுகிறார்கள். இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இப்புகார் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுகுறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

Related posts

ரூ.100 கோடி நில அபகரிப்பில் தொடர்ந்து தலைமறைவு அதிமுக மாஜி அமைச்சர் முன்ஜாமீன் கேட்டு மீண்டும் மனு: இன்று விசாரணைக்கு வருகிறது

நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் நிறுத்தி விடுவேன்: டிரம்ப் சூளுரை

ரூ.1 லட்சம் லஞ்சம்; மி.வா. அதிகாரிகள் கைது