நிலம் கையகப்படுத்துவதை கைவிட கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


காஞ்சிபுரம்: மதுரமங்கலம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று கிராமமக்கள், கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்துள்ளனர். மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிராமமக்கள், கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர். அதில், காஞ்சிபுரம் வட்டம், மதுரமங்கலம் கிராமத்தில் சிறு, குறு விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். தற்போது, மதுரமங்கலம் கிராமத்தில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

ஆகவே, நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட மோசமான பிரச்னைகளை கூட நிலத்தை விற்காமல் பாதுகாத்து விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம்.  தற்போது, இந்த அறிவிப்பு எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. ஆகவே, எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Related posts

ஜிம்பாப்வே டி20 தொடரில் சுதர்சன், ஜிதேஷ், ராணாவுக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் ரைபாகினா: விலகினார் மர்ரே