அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்கும் கிளப், ஹோட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு

சென்னை: அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்கும் கிளப், ஹோட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மது விற்க வேண்டும் என்ற நிபந்தனையை மீறி மது விற்பதாக புகார் அளித்துள்ளனர். வழக்கறிஞர் சுரேஷ்பாபு தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. உரிமம் பெற்றுள்ள கிளப், ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தி, விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்