பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு சொந்தமான நரிக்குளம் ஏரியை மீட்க வேண்டும்: கம்யூனிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் மேம்பாலங்கள் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மாநாடு, பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் வட்டக்குழு உறுப்பினரும், வார்டு உறுப்பினருமான லோகநாதன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துளசிநாராயணன், வட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் கீதா, வட்டக்குழு உறுப்பினர்கள் ஜோசப், காமாட்சி, முனிரத்தினம், கிளைச் செயலாளர் அரசு, ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டம், பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குளம் ஏரியை பழைய ஏசிஎல் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. அதனை மீட்டு ஊராட்சியில் ஒப்படைக்க வேண்டும் என உரையாற்றினர். அப்போது கோரிக்கை மாநாட்டில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை பிரச்னைகள் குறித்து மனு கொடுத்தனர். அதில் பஜனை கோயில் தெருவில் நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசித்து வரும் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும், குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமரை ஏரியில் ரசாயன கழிவுநீர் விடுவதை தடுத்து ஏரியை தூய்மை படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது