பிஎட் கல்லூரி மாணவர் சேர்க்கையை ஆன்லைனில் பதிவேற்ற தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பிஎட் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவியரின் சேர்க்கை குறித்த விவரங்களை பிஎட் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்சிடிஇ வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி பிஎஸ்சி பிஎட், பிஏ பிஎட் படிப்புகளில சேர்ந்துள்ள மாணவ மாணவியர் குறித்த விவரங்களை 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் மாணவர் சேர்க்கைக்கான தகுதிக் கட்டணம் செலுத்த வேண்டிய விவரங்கள் வருமாறு: பதிவுக் கட்டணம் ரூ.125, உள் கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சிக்கு ரூ.40, பண்பாடு மற்றும் இளைஞர் விழா ரூ.40, விளையாட்டுக் கட்டணம் ரூ.50, நூலகம் ரூ.100, தகுதித் கட்டணம் ரூ.280 என மொத்தம் ரூ.635 கட்டணத்தை 25ம் தேதிக்குள் பல்கலைக் கழக இணையத்தில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பிஎஸ்சிபிஎட், பிஏபிஎட் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் பதிவேற்றம் செய்ய பின்பற்ற வேண்டும்.

Related posts

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்