வளர்ப்பு நாயை கவ்விச் செல்ல முயன்ற சிறுத்தை தப்பி ஓட்டம்

கூடலூர்: நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுச்சேரி பகுதியில் வசிக்கும் தம்மன்னன், யசோதா ஆகியோரது வீட்டின் காம்பவுண்ட் பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. அங்கு இருந்த வளர்ப்பு நாயை பிடித்துச் செல்ல நாயை கவ்வியது.

நாய் குறைக்கும் சத்தம் கேட்டதும் உடனடியாக வீட்டில் இருந்த தம்மன்னன் அவரது மனைவி ஆசிரியர் யசோதா ஆகியோர் முன்புற விளக்கை போட்டு சத்தம் போட்டவுடன் சிறுத்தை நாயை விட்டு விட்டு சிறுத்தை தப்பி ஓடியது. இது அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சிறுத்தையிடம் சிக்கி உயிர்பிழைத்த நாய் சிறு காயங்களுடன் நலமாக உள்ளது.

இது போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் வளர்ப்பு நாய் மற்றும் ஆடுகளை வேட்டையாடி செல்கின்றன. இப்பகுதியிலுள்ள வனத்துறையினர் கண்கானிப்பு கேமிரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னையில் சீதாராம் யெச்சூரி உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதில் 187 பேர் பலி: 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம்