பெருஞ்சலங்கை, வள்ளி கும்மி ஆட்டம்: கொமதேக ஈஸ்வரன் துவக்கி வைத்தார்

கோபி: கோபி அருகே பெருஞ்சலங்கை ஆட்டம், வள்ளி கும்மி ஆட்டத்தை திருச்செங்கோடு எம்எல்ஏவும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் துவங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே நம்பியூர் பிலியம்பாளையம் சாலையில் தனியார் மைதானத்தில் நம்பியூர் கொங்கு பண்பாட்டு கழகம் சார்பில் வள்ளி கும்மி ஆட்டம் மற்றம் பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிவராஜ் தலைமையில் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி பாலு முன்னிலையில் பெருஞ்சலங்கை ஆட்டம் மற்றும் வள்ளி கும்மி ஆட்டத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் துவங்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் சீருடை அணிந்து, வள்ளி பிறந்ததில் இருந்து முருகனை திருமணம் செய்தது வரை பாடலுக்கு ஏற்ப நடனமாடினர்.

இந்நிகழ்ச்சியில் கொங்கு பண்பாட்டு மைய தலைவரும், மாநில கலை இலக்கிய அணி செயலாளருமான ஆதன் பொன் செந்தில்குமார், ஈரோடு மேற்கு மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை நம்பியூர் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பார்த்து மகிழ்ந்தனர்.

Related posts

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!