பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மனப்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் இவர் இன்று காலை ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்திற்கு முத்துலிங்கம் (வயது 67) பதிவு செய்திருந்தார். அதற்காக, பொம்மனப்பாடி – மங்கூன் சாலையில் ஒதுக்கப்ட்ட பகுதிக்கு சென்று வேலை பார்த்தார். அப்போது முத்துலிங்கம் மயங்கி சுருண்டு விழுந்தார்.

அங்கிருந்தவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு பரிசோரித்த மருத்துவர் அவர் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு திருமணமாகி சென்று விட்டனர். மேலும், இது குறித்து பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்