மாற்றுத்திறனாளிகள் சமூகதரவுகள் கணக்கெடுப்பு பணிகள்: சென்னை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தி தமிழகத்தின் கடைகோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கிடும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புபணி சென்னை மாவட்டத்தில் நடைபெற்றுவருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பை MOBILE APP ல் மேற்கொண்டு அவர்களுக்கான சமூக தரவுத் தொகுப்பை (Social Registry) நிறுவத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இக்கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பொருட்டு மாற்றுத்திறனாளிகளுடன் தொடர்புடைய அரசு துறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சகள் அளிக்கப்பட்டு தொலைபேசி வாயிலாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கணகெடுப்பு பணியானது செப்டம்பர் 2023 முதல் டிசம்பர் 2023 வரை நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது மாற்றுத்திறனாளிகளை உள்ளடத்தல், அணுகுதல் மற்றும் வாய்ப்புகள் ஆகிய உதவிகள் அனைத்தும் கடைகோடியில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் பொருட்டு இக்கணக்கெடுப்பு பணியானது நடைபெற்றுவருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினர்கள் இக்கணகெடுப்பு பணிக்கு தங்கள் இல்லம் தேடிவரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி மாற்றுத்திறனாளிகள் விவரங்களை பதிவு செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுகொண்டுள்ளார்.

Related posts

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை