5 நலத்திட்ட உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் 5 வகையான நலத்திட்ட உதவிகள் பெற, இ-சேவை மையத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் நல உதவிகளான கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக் கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆகிய 5 வகையான நலத் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாற்றுத்திறனாளிகள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!