புழல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: மோட்டார் சைக்கிள் பறிமுதல்

புழல்: புழல் சுற்றுவட்டார பகுதிகளில், தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புழல் மற்றும் சூரப்பட்டு, விநாயகபுரம், புத்தகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புழல் அடுத்த புத்தகரம் சூரப்பட்டு சாலையில் உள்ள பெருமாள் கோயிலில் உண்டியல் உடைத்து கொள்ளை போனது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியில் இரண்டு பேர் இரவு நேரங்களில் சுற்றித் திரிவதாக வந்த தகவலின் பேரில் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம்(18) இவருடைய கூட்டாளி புழல் காவாங்கரையை சேர்ந்த பிரகாஷ் என்கிற வாண்டு பிரகாஷ்(18) எனத் தெரிந்தது. இவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் புழல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை கண்காணித்து இரவு நேரங்களில் கஞ்சா பிடித்துவிட்டு பிளாட்பாரங்களில் தங்கி இருந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்களில் பிரகாஷ் என்பவர் சிறு வயது முதலே திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு பலமுறை சிறார் சிறைச்சாலையில் தண்டனை அனுப்பித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. பிரகாஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி