மாற்றுத்திறனாளிகள் சமூகதரவுகள் கணக்கெடுப்புக்கு இல்லம் தேடி வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு: சென்னை கலெக்டர் வேண்டுகோள்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் சமூகதரவுகள் கணக்கெடுப்புக்கு இல்லம் தேடி வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தி தமிழகத்தின் கடைகோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கிடும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புபணி சென்னை மாவட்டத்தில் நடைபெற்றுவருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பை மொபைல் ஆப்பில் மேற்கொண்டு, அவர்களுக்கான சமூக தரவுத் தொகுப்பை நிறுவத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இக்கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பொருட்டு மாற்றுத்திறனாளிகளுடன் தொடர்புடைய அரசு துறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு தொலைபேசி வாயிலாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கணகெடுப்பு பணியானது செப்டம்பர் 2023 முதல் டிசம்பர் 2023 வரை நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது மாற்றுத்திறனாளிகளை உள்ளடத்தல், அணுகுதல் மற்றும் வாய்ப்புகள் ஆகிய உதவிகள் அனைத்தும் கடைகோடியில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் பொருட்டு இக்கணக்கெடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினர்கள் இக்கணகெடுப்பு பணிக்கு தங்கள் இல்லம் தேடி வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி மாற்றுத்திறனாளிகள் விவரங்களை பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்