அந்தியூர், உள்ள பிரம்மதேசம்புதூரில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து துணிகள் திருடியவர் கைது

 

அந்தியூர், மார்ச்.25: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூரை சேர்ந்தவர் கேசவன் (45). இவர் பிரம்மதேசம் பாலம் பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 20ந்தேதி அந்த வழியே சென்ற இதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஈஸ்வரன் வேனில் துணிக்கடையில் இருந்து துணிகளை ஒருவர் ஏற்றிக் கொண்டிருப்பதை பார்த்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் கடைக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரெடிமேட் ஷர்ட்டுகள், பேண்டுகள் மற்றும் சேலைகள் ரூ. ஒரு லட்சம் மதிப்பில் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து கேசவன் அந்தியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து துணிக்கடை பூட்டை உடைத்து திருடிவர்களைத் தேடி வந்தனர்.

நேற்று வெள்ளையம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்குரிய ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ்(22) என்பதும் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரம்மதேசம் புதூர் பகுதியில் உள்ள துணிக்கடையில் துணிகளை திருடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் பவானி ஜெஎம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்