பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனத்தை அணிந்துவரக்கூடாது: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்வீட்

மதுரை: பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனத்தை அணிந்துவரக்கூடாது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் அவர்களின் தலைமையில் நாளை சிறப்பாக நடைபெறவுள்ளது. அச்சமயம், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்துவருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்துவருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனத்தை அணிந்துவரக்கூடாது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆளுநர் வருகை தரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி