பெரியாறு அணையை கட்டியவர் பென்னிகுக் பொங்கல் விழா: அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை

கூடலூர்: பெரியாறு அணையைக் கட்டி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர உதவிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக். இவரது பிறந்த நாளான ஜன.15ம் தேதியை தென் தமிழக மக்கள் பென்னிகுக் பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு முதல் இவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் நடந்த 183வது பிறந்தநாள் விழாவில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு, தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப் மணி மண்டபத்தில் உள்ள பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து லோயர்கேம்ப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெற்றது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தென்னங்கீற்றுகளால் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரல், அம்மிக்கல் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உழவர்களின் ஏர் கலப்பை வடிவத்தில் செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மொத்தம் 183 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் வெளிநாட்டினரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

Related posts

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை