பெரியார் பல்கலை. துறைத் தலைவர் நியமனத்தில் விதிமீறல் புகார்..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் நியமனத்தில் துணை வேந்தர் ஜெகநாதன் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. கல்வியியல்துறை தலைவர் பதவிக்கு உரிய தகுதியும் பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியை புறக்கணிப்பட்டதாக புகார் எழுந்தது. தகுதியுள்ள பேராசிரியை தனலட்சுமியை புறக்கணித்துவிட்டு பேராசிரியர் வெங்கடேஸ்வரனை துணைவேந்தர் ஜெகநாதன் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கல்வித்துறை தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் வெங்கடேஸ்வரன் சேலம் பல்கலைக்கழக்திலேயே பணிபுரியவில்லை என புகார் எழுந்தது. பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வராக இருந்த பேராசிரியர் வெங்கடேஸ்வரனை துறைத் தலைவராக நியமித்தது விதிமீறல் எனப் புகார் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்