பெரியபாளையம் பகுதியில் ஆரணியாற்றின் கரை சீரமைப்பு பணி விறுவிறு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பகுதியில் ஆரணியாற்றின் கரைகளை சீரமைக்கும் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் கடும் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் ஆற்றின் கரைகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரியில் இருந்து இரவோடு இரவாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.  இதனால் ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம், பெரியபாளையம், ஆரணி, ஏ.என். குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றின் கரைகள் சேதமடைந்தது.

இந்நிலையில் ஆற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தமிழக அரசு ஆரணியாற்றின் கரைகளை சீரமைக்க ரூ.23 கோடி நிதி ஒதுக்கியது, அதன்படி ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், பாளேஸ்வரம், பெரியபாளையம், ஆரணி, பெருவாயல், ஏ.என்.குப்பம் ஆகிய பகுதிகளில் கரைகளை சீரமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதை தொடர்ந்து, பெரியபாளையம் ஆரணியாற்றின் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரைகளில் கற்கள் பதிக்கும் பணிகள் நடந்தது. தற்போது இறுதிக்கட்ட பணியாக பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி கரைகளை சீரமைக்கும் பணிகளில் நீர்வளத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்