பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் புகையிலைப்பொருட்கள் விற்ற கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி மற்றும் தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவின் அடிப்படையில் பெரியகுளம் மற்றும் தேவதானப்பட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சத்தீஸ்வரன் தலைமையிலான குழுவினர் பள்ளிகளின் அருகே செயல்பட்டு வரும் பெட்டிக் கடைகளை கண்காணித்த பொழுது பெரியகுளம் நகராட்சிக்கு எதிராக உள்ள பெட்டிகடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த பொழுது கையும் களவுமாக பிடிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பெட்டிக்கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர். இதேபோல் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசால் தடை பெட்டிக்கடைகளை 15 நாட்கள் திறக்கக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.25000 அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு

காலாண்டு விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க நெல்லை அறிவியல் மையத்தில் மாணவிகள் குவிந்தனர்

துணை முதலமைச்சர் என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன்: உதயநிதி ஸ்டாலின்!