பெரியகுளம் அருகே சீலிங் ஃபேனில் சீறிய 6 அடி நீள பாம்பு

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரத்தில் முகமது என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள வீட்டில் சின்னூரை சேர்ந்த சிலர் தங்கி தோட்ட வேலை செய்து வருகின்றனர். அந்த வீட்டில் விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள், உரமூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள் சுமார் 6 அடி நீள கோதுமை நாகப்பாம்பு திடீரென புகுந்தது. இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடி வந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் தேடியும் பாம்பை கண்டுபிடிக்க முடியாததால் அங்கிருந்து சென்றனர். பின்னர் பாம்பு பிடி வீரர் கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டின் மூலை முடுக்குகளில் தேடி பார்த்தும் பாம்பு சிக்கவில்லை. வீட்டின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள ஃபேனில் இருந்து பாம்பு சீறியபடி வெளியேறியது. அதனை லாவகமாக பிடித்த கண்ணன், பின்னர் வனத்துறையினர் உதவியுடன் அருகில் உள்ள வனப்பகுதியில் பாம்பை பத்திரமாக விடுவித்தார்.

Related posts

மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் கருவறையில் விழும் சூரியக்கதிர்கள்: செப்.30ம் தேதி வரை காணலாம்

மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!