பெரியாண்டாங்கோயில் தடுப்பணையில் மீன் பிடிக்கும் மீனவர்கள்

 

கரூர், ஏப். 29: கரூர் பெரியாண்டாங்கோயிலில் உள்ள தடுப்பணையில் இந்த பகுதியினர் ஆர்வத்துடன் தூண்டில் மூலம் மீன் பிடிக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், செட்டிப்பாளையம், பெரியாண்டாங்கோயில், சின்னாண்டாங்கோயில், லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளளயம் வழியாக மாநகர பகுதியில் பயணிக்கும் அமராவதி ஆறு, கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுடன் கலந்து மாயனூர், குளித்தலை நோக்கி செல்கிறது.இந்நிலையில், குடிநீர் மற்றும் பாசன பயன்பாட்டிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு, பெரியாண்டாங்கோயில் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே சிறிய அளவில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், பெரியாண்டாங்கோயில் தடுப்பணையில் சிறிய அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.அமராவதி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும் சமயங்களில், அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள், ஹாயாக மீன் பிடிக்கும் செயலை மேற்கொண்டனர்.தற்போது, பெரியாண்டாங்கோயில் பகுதியில் உள்ள தடுப்பணையில் சிறிய அளவில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், அதில், ஆர்வத்துடன் இந்த பகுதியினர் மீன் பிடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து