தமிழ்நாட்டில் மது விலக்கு 100 சதவீதம் சாத்தியமில்லை: அண்ணாமலை திட்டவட்டம்

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே முத்து கவுண்டன் புதூர் பகுதியில் பாஜ நாடாளுமன்ற தொகுதி ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். அடுத்த கட்ட தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த இது பயன்படும். கள்ளக்குறிச்சி சென்றபோது சிலர் டாஸ்மாக் மது தண்ணீர்போல் இருப்பதாக சொன்னார்கள்.

போதை அதிகமாக வேண்டும் என்பதால் கள்ளச்சாராயத்தையும், கஞ்சாவையும் நோக்கி நாங்கள் செல்கிறோம் என சிலர் சொன்னார்கள். தமிழ்நாட்டில் மது விலக்கு என்பது 100 சதவீதம் சாத்தியமில்லை. படிப்படியாக கள்ளுக்கடைகளை திறந்துவிட்டால் மதுக்கடைகளை குறைக்கலாம். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனுமதி இல்லாமல் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது என சட்டம் இருந்தும் இது தொடர்ந்து அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Related posts

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு ஸ்ரீமதியின் தாய் ஆஜராகவில்லை: விசிக நிர்வாகியிடம் 1 மணி நேரம் விசாரணை

வாக்களிக்கவில்லை என்றால் ராமனே ஆனாலும் பாஜ கைகழுவி விடும்: மதுரை எம்.பி அதிரடி

ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரிப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்