மக்கள் விரும்பும் அரசை தேர்வு செய்வதை பிரதமர் மோடி பறிக்க விரும்புகிறார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து, மக்கள் விரும்பும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை மக்களிடமிருந்து பறிக்க விரும்புகிறார். ஒருபுறம், ‘நன்கொடை வணிகம்’ செய்து வரும் பாஜ, நாட்டில் ஒரு ‘மீட்பு அரசை’ நடத்தி வருகிறது, மறுபுறம், பிரதான எதிர்க்கட்சியின் கணக்கை முடக்கி, முதலமைச்சர்களை சிறையில் அடைத்து, ஒவ்வொன்றையும் அடக்குகிறது. சுதந்திரமாக குரல் கொடுக்கும், எதிர்கட்சிகளை அநியாயமான முறையில் தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடவும் அவர்கள் விரும்பவில்லை.
பா.ஜ.வில் இல்லாதவர்கள் – சிறை
பா.ஜவுக்கு நன்கொடை – ஜாமீன்
முக்கிய எதிர்க்கட்சி – ஐடி அறிவிப்பு விளையாட்டு
தேர்தல் பத்திரங்கள் – மிரட்டல்
இது போல் நாட்டை நடத்துவது அரசு போல் அல்ல, ஒரு கிரிமினல் கும்பலால் நடத்தப்படுவது போல் தெரிகிறது. இந்த பொய்யான, திமிர்பிடித்த, ஊழல் நிறைந்த அரசைப் பற்றி உண்மையைச் சொல்ல, இந்தியா கூட்டணி டெல்லியில் மாபெரும் கூட்டத்தை நடத்துகிறது. இந்த போராட்டம் பாஜவுக்கும் மக்களின் உரிமைகளுக்கும் இடையே உள்ளது, இதில் நாங்கள் மக்களுடன் நிற்கிறோம். இந்தியாவின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றியில் அடங்கியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?