குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

தும்கூரு மாவட்டம், மதுகிரி நகர மக்களுக்கு தண்ணீர் வழங்கும் சித்தாப்பூர் ஏரியில் தண்ணீர் இல்லாததால், குடிநீருக்காக மக்கள் திண்டாடி வருகின்றனர். மழை இல்லாததாலும், சித்தாப்பூர் ஏரிக்கு ஹேமாவதி தண்ணீர் வராததாலும் தாலுகாவில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில், கடும் குடிநீர் பிரச்னையை எதிர்கொள்ள, நகர மக்கள் தயாராக வேண்டும். கால்நடைகள், செம்மறி ஆடுகள் மற்றும் வன விலங்குகளுக்கும் தண்ணீர் பிரச்னை உள்ளது. நகரில் 23 வார்டுகள் உள்ளதால், பல வார்டுகளில் தண்ணீர் பிரச்னை உள்ளது. தண்ணீருக்காக ஆழ்குழாய் கிணறுகள், கிணறுகள், டேங்கர்களை நாடுகின்றனர். கோடையின் துவக்கத்தில் தண்ணீர் பிரச்னை உள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையில் மக்கள் உள்ளனர். தற்போது மதுகிரி சோழநல்லி ஏரி மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் 76 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வெயிலின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து குழாய் கிணறுகளில் தண்ணீர் குறைந்து தண்ணீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. நகராட்சி விதிகளின்படி ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் 70 லிட்டர் தண்ணீர் வழங்க முடிகிறது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?