மக்கள் குறைதீர் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.47 லட்சம் நிதியுதவி: காஞ்சி கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.47 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 598 கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டு, அவை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து தூய்மைப்பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினருக்கான அடையாள அட்டைகள், கலை பண்பாட்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்கள் 2 பேருக்கு ரூ.1000 மதிப்பிலான மூக்குக் கண்ணாடிகளும், 10 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி உட்பட மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.1.47 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி