சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் செல்லும் ரோட்டில் புதிதாக போடப்பட்ட சாலை சேதம் அடைந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என கிராமத்தினரும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்புத்தூரில் இருந்து பட்டமங்கலம் செல்லும் ரோட்டில் சமீபத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. திருப்புத்தூர்-கண்டரமாணிக்கம் ரோட்டில் இருந்து பட்டமங்கலம் செல்லும் சாலையில் நைனார்பட்டி வரை 4 கிலோ மீட்டர் தூர அளவிற்கு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மாமுண்டியாபுரம் அருகே புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை சரியாக போடாததால் ஓரங்களில் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதிகளில் தெருவிளக்குகள் கிடையாது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலைகளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதம் அடைந்துள்ள இந்த தார்சாலைகளை முறையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினரும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு