நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆட்சியர்கள் ஆஜராக ஐகோர்ட் ஆணை

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த்துறை செயலாளர், ஆணையர், 3 ஆட்சியர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 27-ம் தேதி அதிகாரிகள் ஆஜராகவில்லை எனில், அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண்படியே பதவி உயர்வு வழங்க கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், உத்தரவை மீறி 3 மாவட்டங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது: முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

ராசிபுரம் அருகே பரபரப்பு இரும்பு ராடால் அடித்து தொழிலாளி படுகொலை

கும்பகோணம் அருகே ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது