தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் நிர்மலா சீதாராமன்: பொன்குமார் கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை உட்பட 4 மாவட்டங்களை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தில் கடந்த 17, 18 தேதிகளில் வரலாறு காணாத கடும் மழை பெய்து, அந்த மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. இந்த வரலாறு காணாத பெரும் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், ரூ.21,600 கோடி நிவாரண பணிக்கு நிதி ஒதுக்கிட வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கோரிக்கை வைத்தார். பிரதமரும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில் ஒன்றிய அரசிடம் மாநில அரசு நிதி கேட்டால், ஒன்றிய அரசு என்ன ஏடிஎம்மா? என கேட்டதற்கு அமைச்சர் உதயநிதி, நாங்கள் மாநில அரசு வழங்கிய வரிப்பணத்தில் இருந்து தான் கேட்கிறோம் என்று கூறினார். அதற்கு நிர்மலா சீதாராமன் ஆவேசமாக அறிவுரை வழங்குகிறார். பிறருக்கு அறிவுரை சொல்வதற்கு முன்பு தான் அதற்கு தகுதியானவராக நடந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து மாநிலத்தின் நலனை கருத்தில் கொள்ளாமல், அடாவடித்தனமாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக நிர்மலா சீதாராமன் பேசுகிறார். தமிழ்நாட்டுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் அப்பட்டமாக எதிராக செயல்படும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வன்மையாக கண்டிக்கிறோம்.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்