மக்களின் தீர்ப்பே முடிவானது: ஓபிஎஸ் பேட்டி

அவனியாபுரம்: சென்னை செல்ல நேற்று மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த பத்தாண்டுகளைப் போலவே வரும் ஆண்டும், பிரதமர் மோடி இந்தியா தன்னிறைவு பெறுகிற நாடாக இருக்குமென தெரிவித்ததன் அடிப்படையில், நடப்பு ஒன்றிய பட்ஜெட் அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் கட்டண உயர்வு அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்.

காவிரி பிரச்சினையில் கர்நாடகம் தொடர்ந்து முரண்பாடு செய்கிறது. கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நீரை பெற்று தருவதில் தமிழக அரசு முனைப்பாக இருக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறி வருகின்றனர். முடிவான இறுதித் தீர்ப்பு மக்களுடையது’’ என்றார்.

Related posts

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!