மதுராந்தகம், ஒரகடம் அருகே சாலை விபத்தில் 12 பேர் படுகாயம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் புறவழிச்சாலையில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று திண்டுக்கல்லில் இருந்து சென்னையில் நடைபெற உள்ள பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வேன், முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த 6 பேர் காயமடைந்தனர். இதனால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் காயமடைந்தவர்களை மதுராந்தகம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர்: வாலாஜாபாத் பகுதியை சேர்த்தவர் தனசேகர். அரசு பேருந்து டிரைவரான இவர், நேற்று தாம்பரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் தடம் எண்:55எஸ் பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வண்டலூர்- வாலாஜாபாத் சாலை வழியாக ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பண்ருட்டி அருகே கண்டிகை பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நின்றிருந்த கனரக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கிய விபத்தில், பேருந்தில் வந்த டிரைவர், கண்டக்டர், பயணிகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி