செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ஏ பிளஸ் ரவுடிகள் உட்பட 68 பேர் அதிரடியாக கைது: காவல் துறை நடவடிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 20 நாட்களில் ஏ பிளஸ் ரவுடிகள் உட்பட 68 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 20 நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவம் செங்கல்பட்டு நகரத்தில் நடந்தது. இதை தொடந்து ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட 20 காவல் நிலையங்களில் மொத்தம் 439 ரவுடிகள் உள்ளனர். அதில், ஏ பிளஸ் ரவுடிகள் 33 பேரும், ஏ கிளாஸ் ரவுடிகள் 44 பேரும், பி கிளாஸ் ரவுடிகள் 255 பேரும், சி கிளாஸ் ரவுடிகள் 107 பேரும் அடங்குவர்.

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே தாம்பரம் அருகே இரும்புலியூரை சேர்ந்த லோகேஷ் என்ற ரவுடியை நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்தனர். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மணிகூண்டு பகுதியில் பாமக நிர்வாகி நாகராஜை வெட்டி கொலை செய்தனர். இந்த இரண்டு கொலை சம்பத்தை தொடர்ந்து கடந்த 20 நாட்களில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ரவுடிகளை கைது செய்யும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ஏ பிளஸ் ரவுடிகள் 7 பேரும், ஏ கிளாஸ் ரவுடிகள் 10 பேரும், பி கிளாஸ் ரவுடிகள் 22 பேரும், சி கிளாஸ் ரவுடிகள் 3 பேர் மற்றும் 26 ரவுடிகள் என மொத்தம் 68 பேரை மாவட்டம் முழுவதும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், ரவுகள் மீது நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் தெரிவித்துள்ளார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்