மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறும்.

அதன்படி, பிரதி திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 451 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது

திட்ட மதிப்பீடு தயாரிக்க வல்லுநர் குழு சேலம் உருக்காலை விரிவாக்கம் செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி உறுதி