பா.ஜவுக்கு ஓட்டு இமாச்சலில் தகுதி நீக்கப்பட்ட 6 பேரும் பாஜவில் தஞ்சம்: 3 சுயேட்சைகளும் ஐக்கியம்

புதுடெல்லி: இமாச்சலபிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங் எம்எல்ஏக்கள், பதவி விலகிய 3 சுயேட்சை உறுப்பினர்களும் நேற்று பாஜவில் இணைந்தனர். இமாச்சலபிரதேசத்தில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்த மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர்களான சுதிர் சர்மா, ரவி தாக்கூர், ராஜிந்தர் ராணா, இந்தர் தத் லகன்பால், சேதன்யா ஷர்மா மற்றும் தேவிந்தர் குமார் பூட்டோ ஆகிய 6 பேரும் மாநிலங்களவை தேர்தலில் பாஜவுக்கு வாக்களித்த சுயேட்சை உறுப்பினர்கள் 3 பேரும் நேற்று பாஜவில் இணைந்தனர்.

டெல்லியில் பாஜ தலைமை அலுவலகத்தில் ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், இமாச்சலபிரதேச முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், தேசிய பொதுசெயலாளர் அருண் சிங் மற்றும் மாநில பாஜ தலைவர் ராஜீவ் பிண்டால் ஆகியோர் முன்னிலையில் 9 பேரும் தங்களை பாஜவில் இணைத்து கொண்டனர். 9 உறுப்பினர்கள் இல்லாததால் இமாச்சல சட்டப்பேரவையின் பலம் தற்போது 59ஆக குறைந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் உள்பட 34 உறுப்பினர்களையும், பாஜ 25 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு