Saturday, September 28, 2024
Home » புளியந்தோப்பு பகுதியில் போதை மாத்திரைகள் பயன்படுத்திய 3 பேர் கைது

புளியந்தோப்பு பகுதியில் போதை மாத்திரைகள் பயன்படுத்திய 3 பேர் கைது

by Ranjith

பெரம்பூர்: புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் சமீப காலமாக போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து பயன்படுத்தி அதனால் சிலர் உயிரிழந்தனர். இதனையடுத்து வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவர்களையும், அதனை விற்பனை செய்பவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் புளியந்தோப்பு பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை பயன்படுத்துவதாக புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் பிரவீன் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நேற்று காலை புளியந்தோப்பு ஸ்டாரன்ஸ் ரோடு, அடுக்குமாடி குடியிருப்பு அருகே சந்தேகப்படும்படியான நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவரிடம் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் புளியந்தோப்பு கேஎம் கார்டன் 6வது தெருவைச் சேர்ந்த வல்லரசு (23) என்பதும், அவரிடம் 10 வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில், அவரது தம்பி பேரரசு (19) மற்றும் ஓட்டேரி கொடிக்கடை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 35 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பரத் என்பவர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வல்லரசு, பேரரசு, ஆகாஷ் ஆகிய 3 பேரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பரத் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

sixteen − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi