ஓட்டலில் தங்கிய இருவேறு மதத்தை சேர்ந்த ஜோடி மீது தாக்குதல் பெண்ணை கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்த 2 பேர் கைது: 4 பேருக்கு போலீஸ் வலை, கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகாவில் உள்ள ஒரு ஓட்டல் அறையின் கதவை தட்டி அந்த அறைக்குள் இருந்த ஒரு ஜோடியை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி அதை வீடியோவாக எடுத்தனர். 26 வயது முஸ்லிம் பெண் ஒருவரும், இந்து ஆண் ஒருவரும் அந்த ஓட்டல் அறையில் இருந்தனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஒன்று சேரக்கூடாது என்று, அவர்களை அந்த 6 பேரும் தாக்கியிருக்கின்றனர்.

அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். அந்த பெண் வீடியோ வடிவில் கொடுத்த வாக்குமூலத்தில், சிர்சியிலிருந்து வந்த நான் அந்த ஓட்டலுக்கு பிற்பகல் ஒரு மணிக்கு வந்தேன். அறையில் இருந்தபோது திடீரென வந்து கதவை தட்டிய சிலர், என்னை அடித்து அறையிலிருந்து வெளியே இழுத்துவந்து பைக்கில் கூட்டி சென்றனர். அதன்பின்னர் காட்டுப்பகுதியில் 2-3 இடங்களுக்கு அழைத்துச்சென்று சிலர் என்னை பலாத்காரம் செய்தனர். அதன்பின்னர் ஒரு காரில் நகருக்குள் விடுவதற்கு அனுப்பிவைத்தனர்.

அந்த கார் ஓட்டுநரும் என்னை பலாத்காரம் செய்து, பின்னர் சாலையில் அப்படியே இறக்கிவிட்டு சென்றுவிட்டார். அதன்பின் நான் பேருந்தில் ஏறி சென்றேன். என்னை அடித்து பலாத்காரம் செய்ததில் ஒருவன் பெயர் அப்டாப். மற்றவர்களது பெயர் தெரியவில்லை. என்னை கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் மன்றாடி கேட்டார். இதையடுத்து சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தீவிரமாக விசாரித்த போலீசார், 24 வயது அப்டாப் மற்றும் 23 வயது மடாரா சாப் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மற்ற 4 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதுதொடர்பாக பேசிய ஹாவேரி மாவட்ட காவல் துறை எஸ்.பி அன்ஷு குமார், அந்த பெண் புகாரளித்த 24 மணி நேரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஜனவரி 8ம் தேதி நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடிவருகிறோம். அவர்களது செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்களை பிடித்துவிடுவோம். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்துவருகிறோம் என்றார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது