எம்பி தேர்தலில் மோடியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவர் கிரிமினல் வழக்கு இருப்பதால் ஒருநாள் மோடி மீதும் அமலாக்கத்துறை திரும்பும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளார் ரங்கபாஷ்யம், கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகரன், எஸ்சி துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, வழக்கறிஞர் சுதா, அகரம் கோபி, புத்தன், குறிஞ்சி பாலாஜி, ஏழுமலை, சூளை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, ஈவிகேஎஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: மணிப்பூர் கலவரம் இப்போதுதான் பிரதமருக்கு தெரிகிறதா? நாடாளுமன்ற தேர்தலில் மோடியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். அண்ணாமலை, சிவாஜியை விட மிகப் பெரிய நடிகர். பாத யாத்திரை போனால் தானும் ஒரு ராகுல் காந்தி ஆகிவிடலாம் என நினைக்கிறார். இவர் ஒருபோதும் ராகுல் ஆக முடியாது. பாஜ கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டிருக்கிறார். மோடிக்கு ஏற்படும் முடிவுதான் அவருக்கு ஏற்படும். ஒரு விஷயத்தை மோடி மறந்துவிடக் கூடாது. ஒருநாள் மோடி மீது அமலாக்கத்துறை திரும்பும். ஏனெனில் அவர் மீது பல கிரிமினல் குற்ற வழக்குகள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சொல்லிட்டாங்க…

கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் விரிக்கும் வலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்