மக்கள் குறைதீர் கூட்டத்தில் 285 மனுக்களுக்கு தீர்வுகாண கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக வாளகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 285 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்தார் ராகுல் காந்தி

அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

கன்னியாகுமரியில் கடல்நீர் உள்வாங்கியது: விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை நிறுத்தம்