வங்கியில் கள்ளநோட்டு செலுத்திய 2 பேர் அதிரடி கைது

சிதம்பரம் : தமிழக முழுவதும் கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அதனை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளிலும், மீன் மார்க்கெட், காய்கறி சந்தை, கடைத்தெரு பகுதி உள்ளிட்ட பணப்புழக்கம் அதிக உள்ள பகுதிகளிலும் சம்பவம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள முடசல் ஓடை மீனவ கிராம பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக டீசல் பங்க் உள்ளது. இதில் கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்த பழனிவேல் மகன் சுதாகர்(51), பண்ருட்டி ரெட்டிபாளையம் ஜெயராமன் மகன் செல்வகுமார்(38) இருவரும் டீசல் பங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 7ம் தேதி டீசல் பங்கில் வசூல் பணத்தை செல்வகுமார், சுதாகரிடம் கொடுத்து வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறிவிட்டு விடுமுறையில் சென்றதாக கூறப்படுகிறது.3 நாட்கள் வங்கி விடுமுறை என்பதால் சுதாகர் பணத்தை வீட்டில் வைத்திருந்து 10ம் தேதி பிற்பகல் சிதம்பரம் மேலவீதியில் உள்ள தேசிய வங்கியில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக வங்கி கணக்கில் ரூ.6 லட்சத்து 4500 செலுத்தி உள்ளார்.

பணத்தை மெஷின் மூலம் எண்ணிய போது ரூ.52 ஆயிரத்திற்கு நகல் எடுக்கப்பட்ட கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து வங்கி மேலாளர், சிதம்பரம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் நகர போலீசார் சென்று, டீசல் பங்க் ஆபரேட்டர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

அதில் இவர்கள் இருவரும் சேர்ந்து கள்ள நோட்டுகளை கலந்து வங்கியில் பணம் செலுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சுதாகர், செல்வகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை