நிலுவையில் வைத்திருந்த அரசின் 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

சென்னை: அரசின் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார். ஒப்புதலுக்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். தமிழக அரசு மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மசோதாக்களை நிறைவேற்றும் வகையில் விரைவில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரக் கோரி தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை