வேர்க்கடலைப்பருப்பு துவையல்

தேவையானவை:

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலைப் பருப்பு – 1 கப்,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
வரமிளகாய் – 6,
புளி, பெருங்காயம், உப்பு – தேவைக்கு.

தாளிக்க

கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் – தலா 1 டீஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் எண்ணெ விட்டு, வரமிளகாய், தேங்காய் துருவலை வதக்கிக் கொண்டு, கடலைப்பருப்பை போட்டு ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். ஆறியதும் உப்பு, புளி, பெருங்காயம் சேர்த்து சிறிது நீர் தெளித்து கரகரப்பாக அரைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். துவையலை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். அந்த அளவுக்கு சுவை நிறைந்த ஆரோக்கியமான ஒரு ரெசிபி. இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட சைடிஸாக சாப்பிடலாம்.

Related posts

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி