அமைதியான முறையில் தீர்வு காண மணிப்பூரில் போராட்டம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் நெருக்கடிகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வலியுறுத்தி நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து மாநிலத்தில் பதற்றம் நீடித்து வருகின்றது. சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு பொறுப்பேற்று முதல்வர் பைரன் சிங் நேற்று முன்தினம் ராஜினாமா செய்வதற்கு முன்வந்தார்.

ஆனால் அவரது ஆதரவாளர்கள் அவரை தடுத்து நிறுத்தி ராஜினாமா கடிதத்தை கிழித்தெறிந்தனர். இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை இம்பால் பள்ளத்தாக்கில் அமல்படுத்த வேண்டும் என்றும், நெருக்கடியான சூழலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

Related posts

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்