பழவந்தாங்கல் சுரங்கப் பாதையில் பால்வேன் தலைகுப்புற கவிழ்ந்தது: சாலையில் ஓடிய பால்; டிரைவர், கிளீனர் காயம்

ஆலந்தூர்: வந்தவாசியில் இருந்து சென்னைக்கு பால் ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. இந்த வேன் இன்று அதிகாலை பழவந்தாங்கல சுரங்கப்பாதையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்து பால் கொட்டி சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த விபத்து பார்த்ததும் பொதுமக்கள் விரைந்து சென்று வேனில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் வேனின் உள்ளே சிக்கியிருந்த டிரைவர் திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை சேர்ந்த செல்வ மகாராஜன்(38), கிளீனர் கலையரசன் ஆகியோரை மீட்டனர். காயம் அடைந்திருந்த 2 பேரையும் உடனடியாக மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சுரங்கப்பாதையில் கவிழ்ந்த பால்வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இது குறித்து விசாரிக்கின்றனர்.

Related posts

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை

ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது: ரூ.48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்