பட்டுக்கோட்டை அருகே சிரமேல்குடி கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது

 

தஞ்சாவூர்,நவ.8: பள்ளி அருகே திறக்கப்பட இருக்கும் டாஸ்மார்க் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பட்டுக்கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேகப்பிடம் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் சிரமேல்குடி கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அங்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் மாணவ மாணவிகள் சுமார் 400 பேர் படித்து வருகின்றனர். இதில் மாணவிகளே அதிகம் உள்ளனர். ஓதியடிகாடு, கல்யாண ஓடை, மறவக்காடு ஆகிய கிராமங்களில் இருந்து சைக்கிளில் வந்து செல்கின்றனர். மேலும் சிரமேல்குடியில் வங்கி செயல்பட்டு வருகிறது. அதேபோல் வீரனார் கோயிலும், ஆதிபராசக்தி கோயிலும், விநாயகர் கோயிலிலும் உள்ளது. ஏழை தாய்மார்களும், பள்ளிக்கு வருகின்ற மாணவர்களும் பாதிக்கும் வகையில் டாஸ்மார்க் கடை திறக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க கூடாது. மேலும் வேறு இடத்திற்கு கடையை மாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி