பட்டுச் சேலைகள் பராமரிப்பு

*பட்டுத் துணிகளை சோப்பு போட்டு துவைக்கக் கூடாது. கடலை மாவை நன்கு கரைத்து அதில் பட்டு துணியை ஊறவைத்து கசக்கினால் அழுக்கு போய்விடும்.
*பட்டுப் புடவைகளை பிளாஸ்ட்டிக் உறைகளில் வைத்தால் அலமாரியின் இரும்புக் கறை படாமல் இருக்கும்.
*பட்டுப்புடவைகளுக்கு இஸ்திரி போடும்போது, அதிக உஷ்ண நிலையில் இல்லாமல் மிதமான சூட்டில் வைத்து இஸ்திரி செய்ய வேண்டும்.
*ஜரிகையை உட்புறமாக இருக்குமாறு மடித்து வைத்தால் கறுத்துப் போகாது.
*வெளியில் கட்டிக் கொண்டு போன பிறகு உடனே மடித்து வைக்கக் கூடாது. 2 மணி நேரமாவது காற்றாட கொடியில் உலர்த்த வேண்டும். நாப்தலின் உருண்டைகளை பட்டுப் புடவைக்குள் வைத்து மடித்தல் நல்லது.
*பட்டுப் புடவைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. நிழலில்தான் உலர்த்த வேண்டும்.
*பட்டுப்புடவைகளை அதன் பின் புறத்தில்தான் இஸ்திரி செய்ய வேண்டும். ஜரிகையை பாதிக்காத அளவு இஸ்திரி செய்ய வேண்டும்.
*பட்டுப்புடவையில் காபி, டீ மற்றும் ஏதேனும் கறை ஏற்பட்டால் பொதைக்ஸ் பவுடரை தண்ணீரில் கரைத்து துணியை சிறிது நேரம் ஊறவைத்து, பின் வெந்நீரை ஆறவைத்து அதில் துணியை அலசி எடுத்து பிழியாமல் புடவையிலுள்ள நீரை வடியவிட்டு காய வைத்தால் கறை போயே போச்சு.
– எஸ். விஜயலஷ்மி.

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்