போரூர் சுங்கச்சாவடி அருகே பைக் மோதி ரோந்து காவலர் பலி

பூந்தமல்லி: சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே இன்று மதியம் பைக் மோதியதில் ரோந்து பணியில் காவலர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி படுகாயம் அடைந்து சிகிச்சை பெறும் மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை அருகே திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் குமரன் (53). இவர், போரூர் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு காவலராக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி, அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போக்குவரத்து காவல் பிரிவிலிருந்து போரூர் காவல்நிலைய சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு காவலர் குமரன் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில், தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில், போரூர் சுங்கச்சாவடி அருகே இன்று மதியம் காவலர் குமரன் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாம்பரத்தில் இருந்து மர்ம நபர் ஓட்டிவந்த மற்றொரு பைக், ரோந்து பணியில் இருந்த குமரனின் பைக்மீது வேகமாக மோதியது.

இதில் ரோந்து பணியில் காவலர் குமரன் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பலியானார். விபத்தை ஏற்படுத்திய மற்றொரு பைக்கை ஓட்டிவந்த மர்ம நபர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். படுகாயம் அடைந்த நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ரோந்து காவலர் குமரனின் சடலத்தை கைப்பற்றி, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி படுகாயங்களுடன் சிகிச்சை பெறும் மர்ம நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related posts

வங்கதேசத்திற்கு எதிரான தொடர்; இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார்?.. குழப்பத்தில் ரசிகர்கள்

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்